SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை தை பொங்கல் திருவிழா தமிழர்கள் பகுதியில் தொற்றியது உற்சாகம்

2018-01-13@ 00:43:06

புதுடெல்லி : டெல்லித் தமிழர்கள் மத்தியில் நாளை கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்கான உற்சாகம்களைகட்டத் தொடங்கியது.
புதிய அரிசியை இதற்காகவே வாங்கப்பட்ட புதிய பானையில் திருநீறும் குங்குமமும் இட்டு, சர்க்கரை பொங்கல் செய்வது பொங்கல் பண்டிகை தினமான 2ம் நாள் கலாசாரம். வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, அதன் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மனம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூறி மகிழ்வார்கள். கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். கிராமங்களில் மற்ற பண்டிகைகளுக்கு புத்தாடை வாங்காமல் போனாலும் பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையே அணிந்து கொண்டாடுவார்கள்.

தலைநகரான டெல்லியிலும் பொங்கல் பண்டிகையை நாளை கொண்டாடி மகிழவுள்ளனர். இதில் டெல்லியில் மட்டும் சக்கூர்பூர், புதுடெல்லி, இந்திரபுரி, வஜ்ஜீர்பூர், ஆஸ்ரம், நிஜாமுதீன் ரோகினி மற்றும் பதர்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 லட்சம் தமிழர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் தற்போது பொங்கள் பண்டிகையை நாளை (ஞாயின்று) சிறப்பாக கொண்டாட தயாராகி உள்ளனர். இது குறித்து டெல்லி தமிழக மக்கள் கூறுகையில், “தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான தமிழக மக்கள் பல ஆண்டுகளாய் வசித்து வருகிறோம். இதில் ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்து சென்றாலும் பொங்கல் பண்டிகையை மட்டும் எங்களில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஒரு திருவிழாவை போல் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம். மேலும் இந்த பொங்கல் நாளை வரவேற்கும் விதமாக வீடுகளுக்கு புதுவித வண்ணங்களை பூசி, வீட்டு வாசல்களில் மாவிலை தோரணைகளை கட்டியும் அழகுபடுத்துவோம்.

இதையடுத்து முதலாவதாக சூரிய பொங்கல் தினமான நாளை (ஞாயிறன்று) நல்ல நேரம் பார்த்து வாசலில் அடுப்பு தோண்டி அதில் புது பானையை வைத்து பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு பிரசாதமாக படைப்போம். மேலும் ஒவ்வொரு பகுதிகளில் இருக்கும் தமிழகளும் ஒன்றாக கூடி பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இதில் பெண்களுக்கென கொக்கோ, கோலப்போட்டி, என்றும், ஆண்களுக்கு கபடி, உரி அடித்தல், சைக்கிள் ரேஸ், கைப்பந்து மற்றும் ஓட்டப்பந்தையம் போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்துகிறோம். இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்வதையும் வழக்கமாக கொண்டுள்ளோம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் பொங்கல் திருவிழாவை நாளை (ஞாயிறன்று) சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் இயற்கை கடவுள் எங்களது வாழக்கையில் எல்லாவித நலங்களையும், மகிழ்ச்சியையும் தந்து அருள்வார் என நம்புகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்