SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசுவை குறைக்க மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு பிரசாரம்

2018-01-13@ 00:41:10

புதுடெல்லி : மத்திய, மாநில அரசுகள் இணைந்து காற்று தூய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடத்த தீர்மானித்துள்ளன. அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் நடந்தது. இதில் மத்திய சுற்றுசூழல் துறை செயலர் சி கே மிஸ்ரா மற்றும் மாநில தலைமை செயலர் அன்ஷு பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் வர்தன் பேசியதாவது: காற்று மாசுவை குறைக்க காற்றுத் தூய்மை பிரசாரம் தொடங்க மத்திய, மாநில அரசுகள் தீர்மானித்து உள்ளன. அதனால் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்க முடிவதோடு, ஆண்டு முழுவதும் சீரான காற்று தரத்தை ஏற்படுத்த முடியும்.  இந்த பிரசாரம் பிப்ரவரி 10ம் தேதி துவங்கி இரு வாரம் நடைபெற உள்ளது.

இந்த முயற்சியில் டெல்லி அரசு, நகராட்சி கவுன்சில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சிகள் இணைந்து செயலாற்ற உள்ளன.
இவர்களுடன் குடியிருப்பு நலவாரிய சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் சிவில் சமூகத்தினர் கலந்து கொள்ளலாம். தூய்மை பிரசாரத்தின் போது, சுற்றுசூழலை பாதுகாக்க கீழ்மட்ட பணியாளர்கள் எடுக்க வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் அதுசார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தூசியை குறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் குப்பைகள் எரிப்பதை தடுப்பது போன்றவை முறையாக நடத்தப்பட்டுள்ளதா என்பது சரிபார்க்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் அமைச்சர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்