SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2017-2018ம் நிதியாண்டில் கூடுதல் செலவு: ரூ.6,522.03 கோடிக்கு துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்

2018-01-13@ 00:19:48

சென்னை: சட்டப்பேரவையில் 2017-18ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசியதாவது: 2017-2018ம் ஆண்டிற்கான  முதல் துணை நிலை மதிப்பீடுகளை முன் வைக்க விைழகிறேன். துணை மானியக் கோரிக்ைககளை விளக்கி கூறும் விரிவானதொரு அறிக்கை வைக்கப்பட்டுள்ளது. இத்துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.6,522.03 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன.

வரவு-செலவு திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புதுப்பணிகள் மற்றும் புது துணை பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு ஒப்புதலை பெறுவதும், எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அத்தொகையினை அந்நிதிக்கு ஈடுசெய்வதும் இத்துணை மானிய கோரிக்கையின் நோக்கமாகும்.

* அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 8,272 குடியிருப்புகளையும், 1.57 லட்சம் தனி வீடுகளை கட்டுவதற்காக, ரூ.588.12 கோடியை அரசு கூடுதலாக அனுமதித்துள்ளது.
* பாக் வளைகுடா பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க, சாதாரண படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, அரசு ரூ.286 கோடி அனுமதித்துள்ளது.
* தேசிய வேளாண் காப்புறுதி திட்டத்தின் கீழ் இழப்பீடு தொகை வழங்க, மாநில அரசின் பங்கான ரூ.177.86 கோடியை அரசு அனுமதித்துள்ளது.
* 2017-18ம் ஆண்டில் நகர்புற மற்றும் கிராமபுற பகுதிகள் வறட்சி நிவாரண நடவடிக்கையாக, சீரான முறையில் குடிநீர் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.120 கோடி அரசு அனுமதித்துள்ளது.
* உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.608 கோடி செலவில், 1435.96 கிலோ மீட்டர் நீளமுள்ள 460 ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் ஊராட்சி சாலைகளை இதர மாவட்ட சாலைகளின் தரத்திற்கு மேம்படுத்துதல் மற்றும் நிலை உயர்த்தும் பணிகளுக்கு அரசு நிர்வாகம் அனுமதித்துள்ளது.
* சென்னை பெருநகர மாநகராட்சி, கோவை, சேலம் மாநகராட்சிகளுக்கு வட்டியில்லா வழிவகை முன்பணமாக ரூ.793.81 கோடி அரசு அனுமதித்துள்ளது.
* மாநில நெடுஞ்சாலை, முக்கிய மாவட்ட சாலை மற்றும் இதர மாவட்ட சாலைகளின் பராமரிப்பு செலவினங்களுக்காக கூடுதலாக ரூ.300 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து சட்டப்பேரவையில் துணை நிதி நிலை அறிக்கை ஒருமனதாக நிறைவேறியது.

அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.2519 கோடி ஒதுக்கீடு
துணைநிதிநிலை அறிக்கையில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.2519 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான ஓய்வுகால பலன்கள், தற்போது பணியில் உள்ள பணியாளர்கள் தொடர்பான நிலுவைகள், வாகன விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை வழிவகை செய்ய, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழிவகை முன்பணமாக ரூ.2,519.25 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • aerospaceexpoberling

  பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

 • accidentkushinagar

  உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

 • karanisvararfestival

  மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

 • cmathleticstale

  மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

 • tiruchurpooram

  கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்