SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதாரண்யத்தில் 100 சதவீத பயிர் காப்பீடு கேட்டு 26வது நாளாக காத்திருப்பு போராட்டம்: வேதனையுடன் பொங்கல் வைத்த விவசாயிகள்

2018-01-13@ 00:10:48

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் பயிர்காப்பீடு கேட்டு விவசாயிகள்  26-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது வேதனையுடன்  போராட்ட பந்தல் முன்பு பொங்கல் வைத்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கத்தரிபுலம், மருதூர், தெற்கு ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு 2016-17க்கான பயிர்காப்பீட்டுத்தொகை 100 சதவீதம் கேட்டு  விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2016-2017ம் ஆண்டு கடும் வறட்சியால் நெற்பயிர்கள் கருகி சேதம் அடைந்தது. அதற்கு இதுவரை பயிர் காப்பீட்டுத் தொகை முழுமையாக  வழங்கவில்லை.

உடனே பயிர்காப்பீட்டுத் தொகை வழங்க  விவசாயிகள் கூட்டுறவு வங்கி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கத்தரிப்புலத்தில் 26வது நாளாக நேற்றும் கையில் கரும்புடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பந்தல் முன்பு பொங்கல் வைத்து போராட்டம் நடத்தினர். இதில் விவசாய சங்க செயலாளர் ஒளிச்சந்திரன், பொருளாளர் அருண் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்