SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா பலவீனமான நாடு இல்லை : சீனாவை எச்சரிக்கும் ராணுவ தளபதி பிபின் ராவத்!

2018-01-12@ 20:52:41

டெல்லி: சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால், இந்தியா பலவீனமான நாடு இல்லை என ராணுவ தளபதி பிபின்ராவத் கூறியுள்ளார். ராணுவ தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாட்டை யாரும் துண்டாட இந்தியா அனுமதிக்காது என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது: இந்திய மண்ணை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. சீனா வலிமையான நாடாக இருக்கலாம். அதே வேளையில் இந்தியா பலவீனமான நாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தேசத்தின் வடக்கு எல்லை மீது கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.

இந்திய எல்லையை ஆக்கிரமிக்க சீனா கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், சீனாவின் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்படும். சீனாவை எதிர்கொள்ளும் திறன் நமக்கு முழுமையாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை குறித்த பாதிப்பை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பேசுகையில், வேதியியல், உயிர் வேதியியல், அணு ஆயுதங்கள் மூலம் உருவாகும் அச்சுறுத்தல்கள், தீவிரவாதிகளால் சாத்தியமாகும் அபாயம் உள்ளது. இவற்றை தடுக்க பாதுகாப்பு துறை, தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், நவீன ஆயுதங்கள் இறக்குமதி மற்றும் வீரர்களுக்கு நவீன பயிற்சி அளிப்பதே சிறந்த வழியாகும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்