SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைரமுத்துவை மிரட்டுவது அருவருக்கத்தக்கது; வரம்புமீறலுக்கு தமிழகத்தில் இடமில்லை: ஸ்டாலின் கண்டனம்!

2018-01-12@ 19:30:10

சென்னை: ஆண்டாள் குறித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து தவறான கருத்து தெரிவித்தாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கவிஞர் வைரமுத்துவை கடுமையாக சாடினார். இது தமிழகத்தில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. தனது கருத்துக்கு கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்பும் இந்து அமைப்புகள் அவர் மீது தொடர்ந்து மிரட்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இருப்பினும் வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மீது மிரட்டு வகையில் கருத்துக்கள் தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெறுப்பு அரசியலுக்கு விதை தூவலாம் என சிலர் நினைக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தரம் தாழ்ந்து கவிஞர் வைரமுத்துவை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது என்றும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில்  சிலர் வைரமுத்துவை மிரட்டுவது கண்டனத்திற்குரியது. சிலர் தங்களின் சுயநலனுக்காக வைரமுத்து மீது அராஜகமான கருத்து தெரிவிக்கின்றனர். அநாகரிகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை. ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்று கருத்து மட்டுமே இருக்க முடியும். ஆண்டாள் பற்றி அறிஞரின் கருத்தை மேற்கோள் காட்டி வைரமுத்து பேசியிருந்தார். ஆனால் வைரமுத்து பேச்சை எதிர்த்து எச்.ராஜா கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார். வைரமுத்துவை மிரட்டுவது அருவருக்கத்தக்க செயல். இவ்வாறு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்