SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு

2018-01-12@ 10:51:36

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 70.42 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.93 புள்ளிகள் உயர்ந்து 34,638.42 புள்ளிகளாக உள்ளது. உலோகம், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் & எரிவாயு மற்றும் மூலதன பொருட்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.71% வரை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 39.05 புள்ளிகள் அதிகரித்து 10,690.25 புள்ளிகளாக உள்ளது.

ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி., கோடக் பாங்க், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், என்டிபிசி மற்றும் எச்.டி.எஃப்.சி. போன்ற நிறுவன பங்குகள் விலை 1% வரை அதிகரித்திருந்தது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.49%, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.08% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.04% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.81% வரை அதிகரித்து முடிவடைந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்