SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் விழாவிற்கு காப்பு கட்டுவது ஏன்..?

2018-01-12@ 10:31:08

பொங்கல் பண்டிகை பொதுவாக நான்கு நாட்களாக கொண்டாடப்படும். முதல் நாள் போகி, இரண்டாம் நாள் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் என்று கொண்டாடி வருகின்றனர். இதன் துவக்கமாக ஒவ்வொரு வீடுகளிலும் போகிப் பண்டிகை கொண்டாடப்படும். அதாவது மார்கழி கடைசியில் பழைய பொருட்களை கழித்து தை மாதத்தை புத்துணர்வுடன் வரவேற்கும்விதமாக இதற்கான பணிகள் நடைபெறும். சிலப்பதிகாரத்தில் இந்திரவிழாவின் போது தங்கள் இல்லங்களைத் தூய்மைப்படுத்தி சுத்தம் செய்து நடைபெற்ற இந்திரவிழாவே இன்றைய போகி என்று கருதப்படுகிறது.

இந்நாளில் பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து சீர்வரிசை அனுப்பும் வழக்கம் இருந்தது. விழாவின் துவக்கமாக வீடுகள் முன்பாக காப்புக்கட்டுவது வழக்கம். கூரைப்பூ, கண்ணுப்பிள்ளைப்பூ என்று பல்வேறு வகையிலும் அழைக்கப்படும் இப்பூவில் மாவிலை, வேப்பிலை, ஆவாரம்பூ, பிரண்டை உள்ளிட்டவற்றை பிணைத்து வீட்டின் கன்னிமூலைகளிலும், முன்புறத்திலும் கட்டுவர். இப்பொருளுக்கு காற்றில் உள்ள ஆக்சிஜன் செறிவை அதிகப்படுத்தி சுத்தப்படுத்தும் தன்மை உள்ளது.

பூச்சிகள் வருவதைத் தடுக்கும். கிராமங்களில் அம்மை, அக்கி, மஞ்சள்காமாலை நோய்களில் இருந்து பாதுகாக்க இன்றும் கூரைப்பூக்களை அதிகம் பயன்படுத்துகிறோம். விவசாயத்திற்கும், வாழும் இடத்திற்கும், தங்களை அண்டியுள்ள கால்நடைகளை சிறப்பிக்கும் விதமாகமாவும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் இதற்கான விழா விளையாட்டுப் போட்டிகள், ஜல்லிக்கட்டு போன்றவற்றுடன் ஆரவாரமாக நடைபெறுவது வழக்கம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • TrumpLondonprotest

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

  • Michigancorpseflower

    18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

  • Chinachemicalplantfire

    சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்