SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘‘பாபு வந்தால் ஜாப் ’’ என கூறும் சந்திரபாபு நாயுடுவின் பேச்சை கிண்டல் செய்து ரோஜா நூதன போராட்டம்

2018-01-11@ 13:02:35

புத்தூர்: ‘‘பாபு வந்தால் ஜாப் ’’ வரும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சில கூட்டங்களில் பேசி வருவதை கிண்டல் செய்யும் வகையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜா, தனது ஆதரவாளர்களுடன் புத்தூரில் திரண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். சந்திரபாபுநாயுடுவின் இந்தப் பேச்சில் உண்மை இல்லை என்றும், அவர் இளைஞர்களை ஏமாற்றுவதற்காகவே அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சந்திரபாபுநாயுடுவின் பேச்சை கிண்டல் செய்யும் வகையில் தன்னுடைய இரு காதுகளில் பூவை வைத்துக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னுடைய தொகுதியான குப்பம் பகுதியில் படித்த இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை வழங்கவில்லை என்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்குவதாக கூறி, அதையும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  

மேலும்  பாபு வந்தால் ஜாப் வரும் என்ற வார்த்தைக்கு ஏற்றார்போல் சந்திரபாபுநாயுடு ஆட்சிக்கு வந்ததும் அவரின் மகன் லோகேசுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கி உள்ளார் என்று ரோஜா கூறியுள்ளார். போராட்டத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் அணியினர், வேலையில்லா பட்டதாரிகள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். நூதனப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களின் காதுகளில் பூவை வைத்திருந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்