SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர் : புலி ஓவியம் கின்னசில் இடம்பிடித்தது

2018-01-10@ 11:47:10

வேலூர்: பெண்குழந்தை பாதுகாப்பு, தாய்ப்பால் அவசியம் என ஓவியங்கள் மூலம் திமிரியை சேர்ந்த இளைஞர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரது புலி ஓவியம் கின்னசிலும் இடம்பிடித்துள்ளது. தம்மை படைத்த இறைவனை தாம் வடித்த கற்சிலைக்குள் கொண்டு வந்து வழிபட வைத்தனர் நம்முன்னோர்கள். அந்த இறைவனை நமக்கு அழகான உருவங்களாக நம் கண் முன் காட்டியவர்கள் ஓவியர்களே. ஆனால், இன்று ஓவியக்கலை என்பது மறைந்து விடுமோ என்ற சூழலில், வேலூர் மாவட்டம் திமிரியை சேர்ந்த விக்ரம்(29) என்ற இளைஞர், அக்கலையில் முதுநிலை படிப்ைப படித்து எதிர்காலத்தில் ஓவியக்கலைக்கு புத்துயிரூட்டுவேன் என்ற இலக்குடன் பயணித்து வருகிறார்.

சிறு வயது முதலே ஓவியத்தில் நாட்டம் கொண்டு சுதந்திர போராட்ட தலைவர்களின் உருவங்கள், கோயில் சிற்பங்கள் ஆகியவற்றை தத்ரூபமாக வரைந்து பரிசுகளை குவித்துள்ளார். தற்போது தமிழ்நாடு நுண்கலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை தொடர்ந்து வருகிறார். லியோனார்டோ டாவின்சியின் மோனலிசா ஓவியத்தை பென்சில் ஓவியமாக வரைந்தார். தேசிய விலங்கான புலியை காக்க வேண்டும் என்ற கோஷத்தை வலியுறுத்தி கோயம்புத்தூர் தனியார் பள்ளியில் 52 மாணவர்களின் துணையுடன் 2013ம் ஆண்டு 3 மாதங்களாக, 35 ஆயிரம் தபால் அட்டைகளில் துண்டு துண்டு ஓவியங்களாக வரைந்து புலியை சேர்த்து முடித்தார். இதற்காக உலக சாதனை புத்தகமான கின்னஸிலும் இந்த ஓவியம் இடம் பெற்றது.

தாய்ப்பால் அவசியத்தை வலியுறுத்தி அதே ஆண்டு புதுச்சேரி கடற்கரையில் தாய் குழந்தைக்கு பால் புகட்டும் மணல் சிற்பத்தை வரைந்து புதுச்சேரி அரசின் பாராட்டை பெற்றார். அதேபோல் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி உபயோகப்படுத்தப்பட்டு வீசப்பட்ட பேப்பர் கப்புகளில் வண்ண பொடிகளால் நிரப்பி அதில் ஓவியம் வரைந்தார். 2020ல் ‘இந்தியா நிச்சயம் வல்லரசு’ என்ற ஓவியத்தை அப்துல்கலாம் உருவத்துடன் வரைந்து 2006ம் ஆண்டு அனுப்பி வைத்தார். இதற்காக விக்ரமை பாராட்டி கடிதம் அனுப்பி வைத்தார் அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம்.

இவ்வாறு தன் சிந்தனை செயல்பாடு அனைத்திலும் ஓவியக்கலையை பற்றி சிந்திக்கும் விக்ரமிடம் அவரது கலை ஆர்வம் குறித்து கேட்டபோது, ‘நான் ஓவியத்தை உயிர்மூச்சாக கொண்டு அதையே படித்து வருகிறேன். இப்போது ஓவியத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் குறைந்து வருகிறது. அதற்காகவே எனக்கு கிடைக்கும் நேரங்களில் அருகில் உள்ள பிள்ளைகளுக்கு ஓவியத்தை கற்பித்து வருகிறேன். அரசும் பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்களை நியமித்து இக்கலையை ஊக்குவிக்க வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்