SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் பலவிதம்

2018-01-08@ 10:44:49

புத்தாண்டு மாரத்தான்

பிரேசிலின் சா போலா நகரில் புத்தாண்டையொட்டி 15 கி.மீ. மாரத்தான் ஓட்டப் போட்டி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஓடுகின்றனர்.

எடை பார்க்கும் உராங்குட்டான்

இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள வனவிலங்கு அருங்காட்சியகத்தில் 6 வயதான சேப்தி என்ற பெண் உராங்குட்டான் வகை குரங்கு உள்ளது. மருத்துவ பரிசோதனையின் போது, எடை மெஷின் மீது ஏறி ஒய்யாரமாக போஸ் தரும்
சேப்தி.

சீனாவில் ரிக்‌ஷா சைக்கிள்


எங்கு பார்த்தாலும் புல்லட் ரயில்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் சீனாவிலும் கூட இன்னமும் ரிக்‌ஷா சைக்கிள்கள் ஓடுகின்றன. தலைநகர் பீஜிங்கில் சவாரிக்காக காத்திருக்கும் ரிக்‌ஷா ஓட்டுநர்கள். ஆனால், ரிக்‌ஷா ஓட்டுவதற்கும் அங்கு லைசன்ஸ் வாங்க வேண்டுமாம்.

கண்கவர் ரோஜா அணிவகுப்பு

அமெரிக்காவில் உள்ள பசாடேனா நகரில் ஆண்டுதோறும் புத்தாண்டை ஒட்டி ரோஸ் பரேடு எனும் ரோஜா அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. மிகவும் பிரசித்திப் பெற்ற இந்த அணிவகுப்பில், காய்கறி, செடி கொடிகள், பூக்கள் போன்ற பல்வேறு இயற்கை வடிவங்களால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் இடம் பெறும். 129 ஆண்டாக இந்தாண்டு நடைபெற்ற அணிவகுப்பில் விருது பெற்ற ஊர்திகளில் ஒன்று.

உறைந்துபோன நயாகரா

அமெரிக்காவில் கடும் பனி கொட்டி வருகிறது. பல மாகாணங்கள் பனியில் உறைந்து போயுள்ளன. ஓன்டாரியோவில் உள்ள உலக பிரபலமான நயாகரா நீர்வீழ்ச்சியின் பல பகுதிகள் உறைந்து காணப்படுகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்