SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போக்ஸ்வேகன் போலோ ஹைலைன் பிளஸ் கார்

2018-01-07@ 01:25:20

போக்ஸ்வேகன் தயாரிப்பில், அடுத்த மாடலாக, போலோ ஹைலைன் பிளஸ் வேரியன்ட் கார் களம் இறங்கியுள்ளது. பெட்ேரால் மற்றும் டீசல் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த காரில் உள்ள சிறப்பம்சங்கள் விவரம்: 16-அங்குல அலாய் சக்கரம், அடர் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான உள்கட்டமைப்பு, உயர் ரக லெதரால் வேயப்பட்ட இருக்கை, ரெயின்-சென்சிங் வைபர், ஒளிக்கு ஏற்றவாறு இயங்கும் ரியர்வியூ கண்ணாடி, முன்பக்க பகுதியில் மத்தியில் அமைக்கப்பட்ட ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை இக்காருக்கு கம்பீரத்தை தருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் ஏஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் வேரியன்ட் மூலம் 74 பிஎச்பி பவர் மற்றும் 110 என்.எம் டார்க் திறன் கிடைக்கிறது. டீசல் வேரியன்ட் இன்ஜின் மூலம் 89 பிஎச்பி பவர் மற்றும் 230 என்.எம் டார்க் திறன் கிடைக்கிறது. இரண்டு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ள என்ட்ரி-லெவல் கார்களில் போக்ஸ்வேகன் கார் தனது போலோ மாடலை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. தற்போது விற்பனைக்கு வந்துள்ள போலோ காரில் இடம்பெற்றுள்ள இந்த கூடுதல் அம்சங்கள் போலோவிற்கான சந்தை நிலவரத்தை மேலும் அதிகரிக்கும். பெட்ரோல் மாடல் விலை 7.24 லட்சம். டீசல் மாடல் விலை 8.78 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்).

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • TrumpLondonprotest

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

  • Michigancorpseflower

    18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

  • Chinachemicalplantfire

    சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்