உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் துவங்கியது
2018-01-06@ 20:41:24

திருச்சி: திருச்சி பெரியார் மணியம்மை பள்ளியில் 3 நாள் உலக நாத்திகர் மாநாடு நேற்று துவங்கி யது. திராவிடர் கழக பொதுச் செயலாளர் அன்புராஜ் வரவேற்றார். திக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்து பேசுகையில், ‘மனித குலத்தின் உரிமைகளை சட்ட ரீதியாக மீட்டெடுக்க இருக்கும் ஒரே நம்பிக்கை நாத்திகம். இது கடவுள் மறுப்பு மட்டுமல்ல. சமூகத்தில் நிலவும் தீண்டாமைகளுக்கும், சாதிய கொடுமைகளுக்கும் எதிரானது. நாத்திகம் என்பது அனைத்து செயல்களையும் அறிவியல் ரீதியாக அணுகக்கூடியது. ஏன், எதற்கு என்ற கேள்வி மூலம் உண்மையை தெரியப்படுத்து வதாகும். இந்தியாவில் நிலவிய சாதிய தீண்டாமைகளை வேரோடு அகற்ற பெரும் முயற்சி செய்தவர் பெரியார். அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பெரியார் கற்பித்த கடவுளை மற, மனிதனை நினை என்ற வாசகத்துக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரித்து வருகிறது’ என்றார். முன்னாள் மத்தியஅமைச்சர் ராசா பேசுகையில், ‘முருகன் பக்தர்கள் குடும்பத்தில் நான் பிறந்தேன். 12வயதில் எனக்குள் கடவுள் நம்பிக்கை போய்விட்டது. அப்போதே நான் பெரியாரின் பேச்சுகளை கேட்டேன், அந்த பேச்சுகள் குறித்து எனது தந்தையிடன் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை. அப்போதே எனக்குள் நாத்திக கொள்கையை விதைத்து விட்டார்கள். திகார் ஜெயிலுக்கு போனபோது நாத்திக கொள்கை பல மடங்கு அதிகமாகிடுச்சு. நாத்திக கொள்கைகள் தான் நம் நாட்டை வருங்காலங்களில் காப்பாற்றும் என்றார்.
ரஜினி மீது மறைமுக தாக்கு
திக தலைவர் வீரமணி அளித்த பேட்டி: உலக நாத்திகர் மாநாடு திக மற்றும் ஆந்திர நாத்திக மையம் சேர்ந்து 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்துவதாகும். ஐரோப்பியா, இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் நாத்திகர் மைய பொறுப் பாளர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்கள். மதம் மக்களை பிரிக்கிறது. இணைப்புகளை உருவாக்குவது நாத்திகமும், பகுத்தறிவும் தான் என்றார்.தமிழகத்தில் தற்போது நிலவும் ஆன்மிக அரசியல் (ரஜினி அறிவித்தது) பற்றி வீரமணியிடம் கேட்டபோது, ஆத்மா என்பது பித்தலாட்டம். அதனுடைய தமிழ் வார்த்தை தான் ஆன்மா. இல்லாத ஒன்றை நடத்துகிறோம் என்பது எவ்வளவு புரட்டு. இதன் தாக்கம் பலரையும் புரிய வைக்கும் உணர்வுகளை உருவாக்கும். ஆத்மா கூடு விட்டு கூடு பாயும் என்பது போல, பலர் கூடு விட்டு கூடு பாய்கிறார்கள். அவர்களை அடையாளம் காட்டும் என்றார்.
மேலும் செய்திகள்
தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதித்தால் என்ன?...ஐகோர்ட் கிளை கேள்வி
அரசு - தனியார் ஊழியர்களுக்கு இடையே ஊதியத்தில் பெரும் பாகுபாடு இருப்பது ஏன்?... நீதிபதி சரமாரி கேள்வி
டெல்லி மக்களால் தோற்கடிக்கப்பட்ட கிரண்பேடி புதுச்சேரியில் ஆட்சி நடத்த முயற்சிக்கிறார்: அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்
புளியங்குடியில் யானைகள் மீண்டும் அட்டகாசம் : விவசாயிகள் பீதி
மீனவர் வலையில் சிக்கிய 15 டன் கொம்பன் திருக்கை
80 ஆண்டுகளுக்கு பின் ஆதிவராகபெருமாள் கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!