SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 மீனவர் சுட்டு கொலை : முதல்வர் உம்மன் சாண்டியுடன் இத்தாலி அமைச்சர் ஆலோசனை

2012-02-23@ 14:36:02

திருவனந்தபுரம்: குமரி மீனவர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டியுடன் இத்தாலி அமைச்சர் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். இவர்களது போலீஸ் காவல் இன்றுடன் முடிகிறது. இன்று மாலை இவர்களை கொல்லம் போலீசார், கருநாகப்பள்ளி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். இருவரையும் மீண்டும் காவலில் விசாரிக்க கோரி போலீசார் மீண்டும் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே டெல்லி வந்துள்ள இத்தாலி வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஸ்டபான் மிஸ்துரா, இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரனீத் கவுரை சந்தித்து பேசினார். அப்போது, துப்பாக்கிச் சூடு சர்வதேச எல்லையில் நடந்துள்ளது. எனவே இந்தியா ஒருதலைபட்சமாக விசாரணை நடத்த கூடாது என்று கூறினார். அதற்கு, இந்திய எல்லையில்தான் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. எனவே இந்திய சட்டத்துக்கு உட்பட வேண்டும் என்று பிரனீத் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, மீனவர்களை சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கிகளை கைப்பற்ற, கப்பலில் சோதனை நடத்த கொல்லம் 2வது வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. ஆனால், கப்பலில் சோதனை நடத்த உத்தரவிட இந்தியாவிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று கப்பல் கேப்டன் உம்பர்டோ கூறியுள்ளார். இந்நிலையில் இத்தாலிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஸ்டபான் மிஸ்துரா இன்று கேரள முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
abilify and coke abilify maintena abilify and coke
cialis cvs coupon cialis coupon cialis 20mg
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்