SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

க்ரோம் வழியே இணையதளங்களுக்குள் ஊடுருவும் விளம்பரங்களைத் தடுக்க கூகுள் நிறுவனம் முடிவு

2017-12-22@ 14:31:57

கலிஃபோர்னியா: கூகுள் நிறுவனம், இணையதளங்களில் செய்யப்படும் விளம்பரங்கள் மீது புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் அதன் க்ரோம் ப்ரவுசர்களின் வழியே இணையதளங்களைப் பார்க்கும்போது ஊடுருவும் விளம்பரங்களைத் தடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விளம்பரக் கட்டுப்பாடு வரும் 2018ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், கூகுளின் இந்த முடிவு குறித்து பல்வேறு இணையதள நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்தியாவில் 90 சதவகிதம் ஸ்மார்ட்போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தையே கொண்டுள்ளன. அவை அனைத்திலும் க்ரோம் ப்ரவுசர் உள்ளது. இந்நிலையில், கூகுளின் இந்த விளம்பரக் கட்டுப்பாடு சிறு இணையதள நிறுவனங்களைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இது கூகுளின் சர்வாதிகாரப்போக்கு என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விளம்பரத் கட்டுப்பாட்டை குறிப்பிட்ட பயனாளர் தனது மொபைலில் ஆஃப் செய்து வைக்கும் அம்சமும் இருக்கும் என்று கூகுள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • LumiereFestivalLondon

    லண்டனில் லூமியர் ஒளி திருவிழா 2018: வண்ண விளக்குகளில் காட்சியளிக்கும் தலைநகரம்

  • bus_fire_kazakhstan

    கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

  • london_light_festival

    குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

  • kalaivanar_arangil11

    கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்