SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.கே.நகரில் ரூ.100 கோடி அளவிற்கு வாக்காளருக்கு பண தர திட்டம் : தேர்தல் ரத்தா? ; பத்ரா பரபரப்பு பேட்டி

2017-12-16@ 18:04:01

சென்னை : ஆர்.கே.நகரில் தொகுதியில் அமைச்சர்கள் முகாமிட்டு தெருவுக்கு தெரு வாக்காளருக்கு பணம் தருகின்றனர் என திமுக வேட்பாளர் மருதுகணேஷ் குற்றம்சாட்டியுள்ளார். திமுகவினர் சுமார் ரூ.20 கோடியை பிடித்து கொடுத்து உள்ளனர் என மருதுகணேஷ் கூறியுள்ளார். சுமார் ரூ.100 கோடியை வாக்காளருக்கு வழங்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்தாலும் போலீஸ் நடவடிக்கை எடூக்கவில்லை என மருதுகணேஷ் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தை பொதுமக்கள் மற்றும் திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவினர் மீதான புகாரை பதிவுசெய்ய போலீஸ் தாமதப்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தா? : பத்ரா கருத்து

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்று இப்போது எதுவும் சொல்ல முடியாது என பத்ரா கருத்து தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா புகார் குறித்து விசாரித்து வருகிறோம். புகார் உண்மையாக இருப்பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்திய பிறகு சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா பேட்டியளித்துள்ளார்.

போலீஸ் விசாரணை

கொருக்குப்பேட்டை ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள பிசியோதெரபி மையத்தில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த அதிமுக பிரமுகர் பச்சையப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ரூ.20 லட்சம் பறிமுதல்

சென்னை கொருக்குப்பேட்டையில் மேலும் ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ.20 லட்சம் பணம் பறிமுதல் செய்துள்ளனர்.

மூட்டை மூட்டையாக பணம்

அதிமுகவினரிடம் இருந்து மூட்டை மூட்டையாக பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு வீட்டில் ரூ.20 லட்சம் பதுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல்  அதிகாரியிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. பணம் பதுக்கப்பட்டுள்ள வீட்டுக்கு எதிரே திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொருக்குப்பேட்டையில் பணம் பதுக்கப்பட்ட வீட்டுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் பண மழை

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 210 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு சாவடிக்கும் பணம் தர சராசரியாக 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் அதிகபட்சமாக 50 வாக்குக்கு பணம் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்