SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா புகார் எதிரொலி : சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா தலைமையில் ஆலோசனை

2017-12-16@ 16:31:06

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து தலைமை செயலகத்தில் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தேர்தல் ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆர்.கே.நகரில் பல இடங்களில் அதிமுகவினர் பண விநியோகம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிறப்பு தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தேர்தல் ரத்தாகுமா?

ஆர்.கே.நகரில் பணமழை பொழிந்து வருதால் இடைத்தேர்தல் மீண்டும் ரத்தாக வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சூழலை பொறுத்து தேர்தல் ரத்து பற்றி முடிவு என்று தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ரா தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடாவால் தான் கடந்த ஏப்ரலில் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானது.

ஓட்டுக்கு ரூ.6,000

ஆர்.கே.நகரில் ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.6,000 வழங்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்காக வாக்காளர்களுக்கு அமைச்சர்கள் பண விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் எல்லா தெருக்களிலும் பணத்துடன் அதிமுகவினர் வலம் வந்து கொண்டிருப்பதாகவும், வீடு வீடாக சென்று பணத்தை அள்ளி வீசுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பண விநியோகம் ஒருவர் கைது


சென்னை கொருக்குப்பேட்டையில் வீடுகளில் வைத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்கப்பட்டு வந்தது.  வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த சுப்பிரமணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்