SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ.1.50 கோடி ரூபாய் குக்கர்களை லஞ்சமாக கொடுத்ததாக தினகரன் மீது புகார்

2017-12-16@ 13:43:02

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ.1.50 கோடி ரூபாய் குக்கர்களை டிடிவி தினகரன் வழங்கி இருப்பதாக அதிமுக வேட்பாளர் மதுசூதனன் புகார் தெரிவித்துள்ளார். தினகரன் மீதும் துணைபோன குக்கர் நிறுவனம் மீதும் கிரிமினல் வழக்குப்பதிவு செய்வதோடு தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மதுசூதனன் வலியுறுத்தி உள்ளார்.  

சென்னை ஆர்கேநகர் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ளன. தேர்தல் களத்தில் 59 வேட்பாளர்கள் இருந்தாலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக மதுசூதனனும், தினகரனும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதோடு மட்டுமலலாமல் தொகுதியில் ஆங்காங்கே இரு தரப்பினரும் மோதலிலும்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் இரு தினங்களுக்கு முன்பு ராயபுரத்தில் உள்ள ஒரு குக்கர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினார்கள்  இந்த சோதனையை சுட்டிக்காட்டி அதிமுக வேட்பாளர் மதுசூதனன், மற்றும் அவரது வழக்கறிஞர் தற்போது தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருக்கின்றனர்.

அந்த மனுவில்  டிடிவி தினகரன் தொகுதி வாக்காளர்களுக்கு குக்கரை லஞ்சமாக கொடுத்திருப்பதாக குற்றம் சாட்டி இருக்கின்றனர். எனவே தினகரன் மீதும் அவருக்கு துணைபோன குக்கர் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக வணிக வரித்துறையினரும், வருமான வரித்துறையினரும் இணைந்து விசாரணை  நடத்த வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

  • italyrain

    இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்