SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டில் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி

2017-12-16@ 13:14:32

சென்னை : கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் தண்டனை விவரங்கள் என்ன? என்று ஜன.10 ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று  மத்திய ,மாநில அரசுகளுக்கு  உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் 25 கேள்விகளை எழுப்பியுள்ளார்.இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள், மகளிர் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசுகள் ஜனவரி 10ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.  

 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருக காரணம் என்ன? என்று வினவிய நீதிபதி, உடுமலை சங்கர் கொலை வழக்கு விசாரணைக்கு கண்காணிப்பு கேமிரா உதவியுள்ளது என்றார். இதனையாவது அனைத்து பொது இடங்கள், சந்திப்புகளில் ஏன் கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கக்கூடாது? என்றும் வர கேள்வி எழுப்பினார்.

 மேலும் பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கான தண்டனைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைத்து தனிச்சட்டம் ஏன் இயற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது ? என்றும் வினவினார். கடந்த 10 ஆண்டுகளில் வன்கொடுமை வழக்குகளில் தண்டிக்கப்பட்டோரின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர்  கடந்த 2016ல் தொடரப்பட்ட 3,38,954 வழக்குகளில் 39,068 வழக்குகள் பாலியல் வ்ன்கொடுமை வழக்குகள் என்றும் கூறினார்.

பெண்கள் மீதான வன்முறை, பணியிடங்களில் பாலியல் தொல்லை பாதுகாப்பளிக்கும் சட்டங்கள் குறித்த கருத்தரங்கு நடத்தப்பட வேண்டும் என்றும் பெண்களுக்கான சட்டங்கள் மட்டும் போதாது, நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்