SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெரிசான் ஊழியர்கள் மிரட்டி ராஜினமா செய்யவைக்கப்பட்ட விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் தலையிட கோரிக்கை

2017-12-16@ 11:49:00

சென்னை: பிரபல தொழில்நுட்ப நிறுவனமான வெரிசானில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மிரட்டி ராஜினாமா செய்யவைக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வெரிசான் நிறுவனம், இந்தியாவில் வெரிசான் டேட்டா சர்வீஸ் என்ற நிறுவனத்தை சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 7,000 பேர் பணிபுரிந்து வந்த நிலையில், சுமார் 1000 ஊழியர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அடியாட்கள் மூலம் மிரட்டி ராஜினாமா செய்யவைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. எவ்வித காரணமும், முன்னறிவிப்புமின்றி 1000 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாள் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருப்பதாக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரி தொழிலாளர் நலத்துறை ஆணையருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்