SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீர்காழியில் பாஜ ஆர்ப்பாட்டத்தில் கல்வீச்சு

2017-12-12@ 02:24:27

சீர்காழி : இந்துக்கோயில்களை இடிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாக கூறி பாஜகவினர் சீர்காழியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு திடீரென்று வந்த விசி கட்சியினர் கல்வீசி தாக்கினர். இதில் பாஜவை சேர்ந்த 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சீர்காழி டிஎஸ்பி சேகர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசியதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். கல்வீச்சு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 21 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்