SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்லாவரத்தில் துணிகரம் வங்கி அதிகாரி வீட்டில் 90 சவரன் கொள்ளை

2017-12-12@ 00:18:00

பல்லாவரம் : பழைய பல்லாவரம் நடேசன் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் வசிப்பவர் குருநாதன் (27), தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 3ம் தேதி சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் திருச்சி சமயபுரம் சென்றார். தரிசனம் முடிந்து நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீட்டிற்கு திரும்பினர். பயண களைப்பில் அனைவரும் அப்படியே தூங்கினர். நேற்று காலை எழுந்து, குருநாதன் உட்பட குடும்பத்தினர் தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி, வீட்டில் இருந்த லாக்கரில் வைக்க முயன்றனர். அப்போது, அதில், ஏற்கனவே வைத்திருந்த 90 சவரன் தங்க நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால், லாக்கர் பூட்டு உடைக்கப்படாமல் இருந்தது. வீட்டின் பூட்டும் உடைக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.

அதன்பேரில், பல்லாவரம் உதவி கமிஷனர் தேவராஜன்  மற்றும்  குற்றப்பிரிவு ஆய்வாளர்  ரங்கசாமி தலைமையிலான போலீசார் கைரேகை நிபுணர்களுடன்   வந்து, வீட்டில் பதிவாகி இருந்த கை ரேகைகளை  பதிவு செய்தனர்.  லாக்கர் மற்றும் வீட்டின் பூட்டு கள்ளச்சாவி மூலம் திறக்கப்பட்டு கொள்ளை நடந்துள்ளதால், வீட்டில் வேலை செய்பவர்கள் கைவரிசை காட்டினரா, உறவினர்கள் யாரேனும் கொள்ளையில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்து   வருகின்றனர். குருநாதன் வீட்டின் அருகிலேயே   அவரது அண்ணன் ஹரிஹரன் குடும்பத்தார் மற்றும் அவரது தாய், தந்தை ஒன்றாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்