SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெருங்குடி ரயில் நிலையத்தில் குடிமகன்கள் கடும் ரகளை

2017-12-12@ 00:16:34

துரைப்பாக்கம் : பெருங்குடி கல்லுக்குட்டை, திருவள்ளுவர் நகர், கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் குமார் (30), பெயின்டர். இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை குமார் தனது நண்பர்களான துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த புருஷோத்தமன் (23), சைகோ மணி, செல்வம் ஆகியோருடன் பெருங்குடி ரயில் நிலையம் அருகே மது அருந்தினார்.  போதை தலைக்கு ஏறியதும் குமாருக்கும் மற்ற மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரத்தில் அடிதடியாக மாறியது. ஆத்திரமடைந்த குமாரின் நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து அவரை மது பாட்டிலால் சரமாரியாக தலையில் தாக்கியுள்ளனர். இதனால், அவர்களிடம் இருந்து தப்பிய குமார், பெருங்குடி ரயில் நிலையம் ஓடினார். அவரை விரட்டி சென்ற 3 பேரும் தொடர்ந்து அவரை தாக்கினர்.

இதில், குமாருக்கு தலை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு டிக்கெட் கவுன்டர் அருகே மயங்கி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அங்கு ரத்த வெள்ளம் ஓடியது. இதனால், 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதை பார்த்த பொதுமக்கள் குமாரை தாக்கியவர்களை பிடிக்க சென்றனர். இதில், புருஷோதமன் மட்டும் சிக்கிக்கொள்ள மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர், படுகாயமடைந்த குமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் போலீசார் புருஷோத்தமனை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய சைகோ மணி, செல்வம் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

  • italyrain

    இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்