SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விமானத்தில் நடிகை சாயிரா வாசிமிற்கு பாலியல் தொல்லை தந்த மும்பை தொழிலதிபர் அதிரடி கைது

2017-12-11@ 12:05:58

மும்பை: விமானத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நடிகர் அமீர்கான் நடத்து கடந்த ஆண்டு வெளியான தங்கல் இந்தி படத்தில் அறிமுகமாகனவர் நடிகை சாயிரா வாசிம். இவர் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். ஏர் விஸ்டாரா விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு அவர் பயணம் செய்த போது பின் இருக்கையில் இருந்த நபர் ஒருவர் அரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்த அவலம் குறித்து இன்ஸ்டாகிராமில் மிகுந்த வேதனையுடன் நடிகை சாயிரா விவரித்து கண்ணீர் மல்க பேசியிருந்தார். இதனையடுத்து சாயிராவிடம் மன்னிப்பு கோரிய விமான நிறுவனம், சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தது. மேலும் இப்படிப்பட்ட நடத்தையை சகித்துக்கொள்ள முடியாது என விமான நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பிட்ட நபர்க்கு விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில் மும்பை போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சாயிராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மும்பையை சேர்ந்த தொழிலதிபரான விகாஸ் சச்தேவ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் உடனடியாக அவரை கைது செய்துள்ளனர்.

நடிகைக்கு பாலியல் தொல்லை தரப்பட்டதற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 2 மகள்களுக்கு நான் தாய் என்ற வகையில் சாயிராவுக்கு நடந்திருப்பது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான தொல்லை, குற்றம் போன்றவற்றில் விரைவாகவும், திறம்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்