SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கைது செய்யப்பட்ட காம கொடூரன் தஷ்வந்த் மும்பை விமான நிலையத்தில் தப்பி ஓட்டம்

2017-12-08@ 00:17:42

சென்னை :  சென்னை குன்றத்தூர் சம்மந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (65). இவரது மகன் தஷ்வந்ந் (24). சில மாதங்களுக்கு முன் போரூரில் பெற்றோருடன் வசித்து வந்த ஹாசினி (7) என்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன்   உடலை சாலையோரம் தீவைத்து கொளுத்தினார்.
இந்த சம்பவத்தில் தஷ்வந்த் கைதானார். பின்னர் ஜாமீனியில் வெளியே வந்த தஷ்வந்த் உல்லாசத்திற்கு பணம் தேவைப்பட்டதால் அவரது தாய் சரளாவிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் தஷ்வந்த தனது தாய் சரளாவை கடந்த 2ம் தேதி படுகொலை செய்து விட்டு அவர் கழுத்தில் கிடந்த தாலி உட்பட 25 சரவன் நகையுடன் தலைமறைவானார். இதையடுத்து அவனின் சிறை கூட்டாளிகள்  செங்குன்றம் மணிகண்டன், திருவல்லிக்கேணி ராஜ் குமார் தாஸ் ஆகியோரை போலீசார் தேடியபோது செங்குன்றம் மணிகண்டனும் மாயமாகி இருந்தான். பின்னர், தனிப்படை யிடம் பிடிப்பட்ட ராஜ் குமார் தாஸ் தகவலின் அடிப்படையில் அப்போது தஷ்வந்த் பஸ்சில் பெங்களூரு வழியாக மும்பை சென்றது தெரியவந்தது.

பின்னர் மும்பை போலீசார் உதவியுடன் மும்பையில் உள்ள செம்பூர் என்ற பகுதியில் பாலியல் அழகி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்த பாலியல் அழகி தஷ்வந்த் தற்போதுதான் ரேஸ்கோர்ஸ் ெசன்றதாக தெரிவித்தார். உடனே, தனிப்படை போலீசார் ரேஸ் கோர்ஸ் இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்து தஷ்வந்தை நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர். பின்னர் தஷ்வந்த் கைது செய்யப்பட்டதற்கான புைகப்படத்தையும் தனிப்படை போலீசார் வெளியிட்டனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் தஷ்வந்தை சென்னைக்கு அழைத்து வர தனிப்படை போலீசார் விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது தனிப்படையை திசைத்திருப்பி அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமானார். அதேநேரம் தஷ்வந்தை பிடித்த தனிப்படையில் திறமை வாய்ந்த 5 போலீசார் இருந்தனர். அவர்களை மீறி அவன் எப்படி தப்பித்து சென்று இருக்க முடியும்  என்று சந்தேகம் எழுந்துள்ளது.

சிறுமி ஹாசினி பாலியல் படுகொலை செய்யப்பட்ட போதே தஷ்வந்தை என்கவுண்டரில் படுகொலை செய்ய பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேலும், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சில நாட்களில் அவன் தனது தாயை கொடூரமாக படுகொலை செய்தார். அப்போது சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் சார்பில் தஷ்வந்தை என்கவுண்டரில் படுகொலை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் தஷ்வந்த் தனிப்படை கண்காணிப்பில் இருந்து தப்பி ெசன்றதால் அவர் என்கவுண்டர் செய்யப்படுவார் என் தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliland_boyshome

  தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

 • gujaratheavyrain

  குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

 • vintage_car_gurgaon

  பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

 • public_trans_venen

  வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

 • Manilarainstorm

  பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்