SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கங்கையை சுத்தப்படுத்த 1500 கோடி நன்கொடை

2017-12-08@ 00:04:23

மும்பை: ‘கங்கையை சுத்தப்படுத்த ரூ.1,500 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கங்கை நதி சுத்தப்படுத்தப்படும் என்று பாஜ தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதையடுத்து, தூய்மை கங்கை திட்டம் தயாரிக்கப்பட்டது..  இது பற்றி மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: கங்கை மறுசீரமைப்பு திட்டத்திற்காக கடந்த வாரம் லண்டனில் ஊர்வலம் நடத்தப்பட்டது. அதை நான் தொடங்கி வைத்தேன். அதன் மூலம் பல்வேறு நிறுவனங்கள், இங்கிலாந்தை மையமாக கொண்ட தொழில் அமைப்புகள் சார்பில் மத்திய அரசுக்கு இந்த திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி கிடைத்துள்ளது. மேலும், நமது நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் சார்பில் கூடுதலாக ரூ.500 கோடி கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள முன்னணி தொழில் அதிபர்கள் மூலம் பாட்னா, கான்பூர், ஹரித்துவார், கொல்கத்தா பகுதியில் ஓடும் கங்கை சீரமைக்கப்படும்.

மேலும் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு இந்த திட்டத்திற்காக நான் பயணம் செய்ய உள்ளேன். ஒட்டு மொத்தமாக கங்கையை சீரமைக்க மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடிக்கு திட்டம் தயாரித்துள்ளது. இதுவரை 97 திட்டங்கள் இதற்காக தயாரிக்கப்பட்டு அதில் 55 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. 15 திட்டங்கள் தனியார் ஒத்துழைப்புடன் நடைபெறும். மீதம் உள்ள திட்டங்களுக்கு 2018 மார்ச் மாதத்திற்குள் டெண்டர் விடப்படும். இதன் மூலம் 4500 கிராமங்கள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

  • saintjordysayspain

    செயிண்ட் ஜோர்டி தினம் : ஸ்பெயினில் ஒருவருக்கொருவர் புத்தகங்கள், மலர்கள் பரிசளித்து கொண்டாட்டம்

  • bookfairchennai

    உலகப் புத்தக தினத்தையொட்டி சென்னை கன்னிமரா நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு

  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்