SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓகி’ புயலில் சிக்கி மரணம் அடைந்த அல்லது காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம்

2017-12-08@ 00:04:09

சென்னை: ஓகி’ புயலில் சிக்கி மரணம் அடைந்த அல்லது காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் காப்பீட்டு உதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் `ஓகி’ புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டறிய மேற்கொள்ளப்படும் ேதடுதல் மற்றும் நிவாரண பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்ததும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: `ஓகி’ புயலினால் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 11 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கரை சேர்ந்த தமிழக மீனவர்களை தமிழகத்துக்கு அழைத்து வர 5 ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காணாமல் போன மீனவர்கள், கரை சேர்ந்த மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட படகுகள் குறித்த கணக்கெடுக்கும் பணி கிராம வாரியாக நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில், காணாமல் போன மீனவர்கள் குறித்த விரிவான ஆய்வு மேற்கொண்டு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தலைமையில் அலுவலர் குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் காணாமல் போன மீனவர்களை இறந்தவர்களாக கருதி உரிய நிவாரணம் வழங்கப்படும். ஓகி’ புயலில் சிக்கி மரணம் அடைந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு உதவி 2 லட்சம் உள்பட தலா 10 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். `ஓகி’ புயலில் சிக்கி ஊனமடைந்து, தொடர்ந்து மீன்பிடி தொழில் மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் வழங்க ஏதுவாக மறுவாழ்வு நிதியுதவியாக 5 லட்சமும், மருத்துவ நிவாரணமாக தலா 50 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புயலினால் டிசம்பர் மாதம் மீன்பிடி தொழிலை செய்ய இயலாத நிலையை கருத்தில் கொண்டு, வாழ்வாதாரம் இழந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து மீனவர் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தலா ரூ.2,500 வழங்கப்படும். மேலும், காணாமல் போன மீனவ குடும்பங்களுக்கு சிறப்பு வாழ்வாதார உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

பிற மாநிலங்களில் கரை சேர்ந்த, மீனவர்களின் கோரிக்கை ஏற்று எரி எண்ணெய் உதவி மற்றும் உணவுப்படி உயர்த்தி வழங்கப்படும். அதன்படி குஜராத், மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவில் கரை ஒதுங்கி மீனவர்களுக்கு 1000 லிட்டர் டீசலும், உணவுப்படியாக ரூ.2 ஆயிரமும், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு 750 லிட்டர் டீசலும், உணவுப்படியாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். சேதமடைந்த படகுகள் மற்றும் உபகரணங்களை புதுபிக்க நிவாரணம் வழங்கப்படும். வருங்காலங்களில் அனைத்து படகுகளும் தவறாமல் பதிவு செய்வதுடன் ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் ஜி.பி.எஸ் மற்றும் தகவல் தொடர்பு கருவி பொருத்தப்பட வேண்டும். ஒகி புயலினால் மரணமடைந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவியுடன் கல்வி நிறுவனங்கள் மூலம் திறன்வளர் பயிற்சிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பாதிப்புகளை மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்கவும் அதில் தேவைப்படின் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளவும் காணாமல் போன மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க சட்டபூர்வ தேவைகளில் நடைமுறைகளை தளர்வு செய்து உரிய அரசாணை பெறுவதற்கும் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பத்திரமாக கரை சேர்ந்த மீனவர்களின் விவரங்களை அவர்களின் குடும்பங்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக பத்திரிக்கைகள் மூலம் தெரியப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலில் காணாமல் போன மீனவர்கள் அனைவரையும் தேடி கண்டுபிடித்து பத்திரமாக மீட்டுகரை சேர்க்கும் வரை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் நிதித்துறை செயலாளர் சண்முகம், வருவாய் ஆணையர் சத்யகோபால், கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் கோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் பங்கேற்றனர்.

* புயலில் சிக்கி ஊனமடைந்து, தொடர்ந்து  மீன்பிடி தொழில் மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் மீனவர்களுக்கு மறுவாழ்வு நிதியுதவியாக 5 லட்சமும்,  மருத்துவ நிவாரணமாக தலா 50 ஆயிரம் வழங்கப்படும்.
* அனைத்து குமரி மீனவர்  குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தலா 2,500 வழங்கப்படும். மேலும்,  காணாமல் போன மீனவ குடும்பங்களுக்கு சிறப்பு வாழ்வாதார உதவித்தொகை 5  ஆயிரம் வழங்கப்படும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Ragul_Fishermen

    ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, கேரளா மீனவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு

  • AnubutiShatabditrain

    விமானம் போன்ற சொகுசு வசதிகளுடன் கூடிய அனுபூதி பெட்டி: சதாப்தி ரயில்களில் இயக்க ரயில்வே திட்டம்

  • JamaMasjid_Crack

    361 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதியில் விரிசல்: விரைவில் சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை

  • PeriyaPandian_Homage

    காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தடைந்தது: கறுப்புப்பட்டை அணிந்து தலைவர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்