SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோரிக்கையை வலியுறுத்தி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

2017-12-07@ 20:27:02

கரூர்: அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலக்குழு கூட்டம் குளித்தலையில் நடந்தது. மாநில தலைவர் லாசர் தலைமை வகித்தார். அகில இந்திய தலைவர் திருநாவுக்கரசு, மாநில பொதுசெயலாளர்(பொ) அமிர்தலிங்கம்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தேசிய ஊரகவேலை உறுதி திட்டம் தமிழகம் முழுவதும் கடந்த நிதியாண்டில் ஒரு குடும்பத்திற்கு நூறு நாள் வேலை என்ற முடிவு சட்டப்படி அமலாகவில்லை. சராசரியாக 50, 60நாட்கள் தான் வேலை கொடுக்கப்படுகிறது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் ஒவ்வொரு ஊராட்சியிலும் 20 பேருக்கு தான் வேலை. அதுவும் மரம் நடுவது, கன்றுகள் வைப்பது என சிறிய வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என ஒரு உத்தரவைப்பிறப்பித்து, ஏற்கனவே ஒவ்வொரு ஊராட்சியிலும் நூற்றுக்கணக்கில் வேலை பார்த்து வந்த விவசாய தொழிலாளர்களை நடுவீதியில் நிறுத்தி உள்ளார்.

தமிழக அரசின் இப்போக்கை கண்டிப்பதோடு, வரும் ஆண்டில் தகுதியுள்ள அனைவருக்கும் ஏற்கனவே வேலை பார்த்தது போல் வேலை வழங்கிட கோரியும், விவசாய தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேலை கேட்டு ஜனவரி 30ம் தேதி மனுகொடுக்கும் போராட்டத்தை நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்