SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத முதல்வர், அமைச்சர்கள் எதற்கு: மீனவர்கள் சரமாரி கேள்வி

2017-12-07@ 19:23:43

கன்னியாகுமரி: முதல்வர் எடப்பாடி இங்கு வருவாரா என்று ஆட்சியரிடம் மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சேதத்தை சீர்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். சொன்னதையே மீண்டும் கூறுவதாக ஆட்சியர் மீது மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குழித்துறை தண்டவாளத்தில் அமர்ந்து மீனவர்கள் 7 மணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத முதல்வர், அமைச்சர்கள் எதற்கு என்று மீனவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். தங்கள் ஓட்டு மட்டும் தான் ஆட்சியாளர்களுக்கு தேவையா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். போலீசை வைத்து துப்பாக்கியால் சுட்டாலும் கலைய மாட்டோம் என்று மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர். மேலும் மீனவர்கள் தாங்களை கேரளாவுடன் இணைக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

மீனவர்களுடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை:
260 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் மத்தியில் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுவதால் போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். எல்லாம் மீனவரையும் கண்டுபிடிக்கும் வரை தேடும் பணி தொடரும் என்று ஆட்சியர் கூறியுள்ளார். உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியர் கூறியுள்ளார். தேசியப் பேரழவு என அறிவிக்ககோரி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம் என்று ஆட்சியர் கூறியுள்ளார். நிவாரணம் குறித்து மாநில அரசுதான் முடிவு எடுத்து அறிவிக்கும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்