SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியபோது விபத்து: லாரி மீது சொகுசு கார் மோதல் இயக்குநர் கவுதம் மேனன் காயம்

2017-12-07@ 18:30:13

சென்னை: புதிய படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் சொகுசு கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக கவுதம் வாசுதேவ் மேனன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார். தற்போது நடிகர் தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் டோட்டா என்ற படமும், விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற இரண்டு படங்களை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.

புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டு, இன்று அதிகாலை பழைய மாமல்லபுரம் சாலை வழியாக துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு கவுதம் வாசுதேவ் மேனன் விலை உயர்ந்த சொகுசு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்துள்ளார். செம்மஞ்சேரி ஆவின் பால் பண்ணை சிக்னல் அருகே வரும் போது, துரைப்பாக்கத்தில் இருந்து வந்த ஒரு லாரி சிக்னலில் ‘யு’ டர்ன் அடித்து மீண்டும் துரைப்பாக்கம் நோக்கி சென்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத கவுதம்மேனன் தனது காரை பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் வேகத்தின் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி பின்னால் பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன் பக்கம் கடும் சேதமடைந்தது. சொகுசு கார் என்பதால் ஏர் பேக் வெளியே வந்தது. இதனால், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதை பார்த்த பின்னால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், காரில் இருந்து கவுதம் வாசுதேவ் மேனனை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான சொகுசு காரையும், லாரிையயும் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவர் படப்பையை சேர்ந்த ராஜேஷ் (30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், கவுதம் வாசுதேவ் மேனன் குடிபோதையில் அதிவேகமாக வந்ததால், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லாரியில் மோதினாரா அல்லது தூக்க கலக்கத்தில் விபத்தில் சிக்கினாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். திரைப்பட பிரபலங்கள் அண்மை காலங்களாக இரவு நேரத்தில் குடிபோதையிலும், அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்துகளை ஏற்படுத்துவது தொடர் கதையாகி வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து கவுதம் மேனனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘பெரிய விபத்து எதுவும் இல்லை. வீணாக வதந்தி பரப்புகிறார்கள். நான் பாதுகாப்பாக இருக்கிறேன்’ என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_well_fare

    மோடியின் மிசோரம், மேகாலயா பயணம்: பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு

  • delhiamarsolidiers

    இந்தியா-பாகிஸ்தான் போரின் 46வது வெற்றி தினத்தையொட்டி அமர் ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை

  • RahulGandhitakecharge

    காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி: தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

  • panipolivu_11

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு :வாட்டி வதைக்கும் குளிரை தணிக்க தீமூட்டி குளிர்காயும் மக்கள்

  • INdonesia_EarthquAke

    இந்தோனேஷியாவின் ஜாவா திவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம், 2 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்