SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலப்பு திருமணத்துக்கு எதிர்ப்பு: நீதிமன்ற வளாகத்தில் காதல் ஜோடியை கொல்ல முயற்சி

2017-12-07@ 17:56:14

கடலூர்: கடலூரில் கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை கொலை செய்ய ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வி என்ற பெண் சிதம்பரத்தில் உள்ள அரசு கல்லூரியில் பயின்று வருகிறார். அதே பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் பயிலும் மாணவர் எழிலரசன். இவர்கள் காதல் திருமணம் செய்வதற்காக கடந்த 1-ம் தேதி கல்லூரிக்கு சென்றவர்களை காணவில்லை என்று 2-ம் தேதி அவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தநிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இருவரையும் விசாரித்த காவல்துறை அவர்கள் மேஜர் என்று தெரிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் நீதிமன்றத்துக்கு வருவதை தெரிந்த அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து இந்த காதல் ஜோடிக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்