SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சீனப் பகுதிக்குள் இந்திய ட்ரோன்: கட்டுப்பாடு இழப்பு என இந்தியா விளக்கம்

2017-12-07@ 17:56:01

பெய்ஜிங்: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்தே இந்திய ட்ரோன் சீனப் பகுதிக்குள் சென்றுவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் இந்தியாவைச் சேர்ந்த ட்ரோன் என அழைக்கப்படும் ஆளில்லா குட்டி விமானம் நுழைந்ததாகக் கூறியுள்ளது. ட்ரோன் கீழே விழுந்ததையடுத்து சீன வீரர்கள் அதை எடுத்து எங்கிருந்து வந்தது எனக் கண்டறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் என சீனா கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டோக்லாம் பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில் ட்ரோன் விவகாரத்தால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து இந்தியத் தரப்பு சீனாவுக்கு விடுத்துள்ள விளக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த ட்ரோன், சீன வான் எல்லைக்குள் சென்று விழுந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனாவுக்கு முன்பே தாங்கள் தகவல் அளித்துவிட்டதாகவும் இந்தியத் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்