SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெ., மரணம் தொடர்பாக நேரில் ஆஜராக பிரதாப் ரெட்டி, ஜெ.தீபா உள்ளிட்ட பலருக்கு விசாரணை ஆணையம் சம்மன்

2017-12-07@ 17:41:46

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் விசாரணை ஆணையர் ஆறுமுகசாமி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க பிரதாப் ரெட்டிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, மருத்துவர் சங்கர் - டிச.12, ஜெ.தீபா - டிச.13, தீபக் - டிச.14, மாதவன் - டிச.15-, மருத்துவர் மகேந்திரன் - டிச.19-ம்  தேதியில் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழக அரசின் முன்னாள் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனை டிச.20-ம் தேதியும், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் டிச.21-ம் தேதியும் நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுபோல டிச.27-ம் தேதி மீண்டும் ஆஜராக அரசு மருத்துவர் பாலாஜிக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. சென்னை எழிலகத்தில் உள்ள கலசமஹாலில் இயங்கி வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் பலரையும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2018

    23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • annanagar_iknt

    அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • perunthu_makkal11

    பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்