SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரே பாலினத்தவர் திருமண மசோதாவிற்கு ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் ஒப்புதல்

2017-12-07@ 17:39:17

சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தேசிய அஞ்சல் கணக்கெடுப்பு நிறுவனம் அந்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 61 சதவீதத்தினர் ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த ஒரே பாலினத்தவர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் சட்டமசோதா மீதான இறுதி வாதம் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் நடந்து வந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் ஒரே  பாலினத்தவர் திருமணத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 150 உறுப்பினர்களில் ஐந்து பேர் மட்டுமே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஒரே பாலினத்தவர் திருமணம் செய்வதற்கு இனி தடையேதும் இல்லை என்றும் இந்த சட்ட மசோதாவால், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஒரே பாலினத்தவர் திருமணம் நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய இந்த நாள் மிகவும் சிறந்த நாள் என பிரதமர் டர்ன்புல் கூறியுள்ளார். ஏற்கனவே நாடாளுமன்ற எம்.பி. மற்றும் விளையாட்டு வீராங்கனை உள்பட பலர் ஒரே பாலினத்தவர் திருமணத்துக்காக தங்களது ஜோடியை தேர்வு செய்து காத்திருக்கின்றனர். ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள நாடுகளில் ஆஸ்திரேலியா 26-வது நாடாக அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-04-2018

    27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்