SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மைசூர் அரச குடும்பத்திற்கு சாபத்தை முறியடித்து 400 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் வாரிசு

2017-12-07@ 17:36:37

மைசூர்: மைசூர் அரச குடும்பத்திற்கு 400 ஆண்டுகால சாபத்தை முறியடித்து வாரிசு பிறந்திருப்பது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மைசூரில் 1612-ம் ஆண்டு போரில் ஸ்ரீரங்கப்பட்டினத்தை உடையார் சாம்ராஜ்யம் வென்றது. ஸ்ரீரங்கப்பட்டினம் ராணி அலமேலம்மாவைத் உடையார் சாம்ராஜ்ய காவலர்கள் துரத்தியுள்ளனர். இதனால் காவிரியில் குதித்து உயிர் நீக்க முடிவு செய்த அலமேலம்மா, உடையார் மன்னருக்கு குழந்தைப் வரம் இல்லாமல் போகட்டும் என சாபம் அளித்ததாக  வரலாறு கூறுகின்றன. இந்நிலையில் சுமார் 400 ஆண்டுகளாக மைசூரு அரச குடும்பத்தினருக்கு குழந்தைகள் பிறக்கவே இல்லை.

குழந்தை பிறக்காத நிலையில் உறவினர்களின் குழந்தைகளை தத்தெடுத்து அரச வாரிசாக்கி முடிசூட்டி வந்தனர். மைசூரை சுதந்திரத்திற்கு முன் ஆட்சி செய்த உடையார் குடும்பத்தின் தத்தெடுத்த இளவரசர் யதுவீர் கிருஷ்ண தத்தா சாம்ராஜ்ய உடையாரின் மனைவி திரிஷிகா தேவிக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்றிரவு 9.30 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை 3 கிலோ எடை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அலமேலம்மா உயிர்நீத்த தலக்காட்டில் அவருக்கு சிலை வைத்து இளவரசர் வணங்கி வந்த நிலையில் ஆண்வாரிசு பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

  • syria_arasupadaigal

    சிரியாவில் போர் : அரசு படைகள் உக்கிர தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 100 பேர் பலி

  • indo_pugai11

    அதிபயங்கரமாக வெடித்துச் சிதறிய சினாபங் எரிமலை: வானுயர எழுந்தது நெருப்புப் புகை

  • ElephantRecreation

    மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் நிறைவு

  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X