SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை ஆதீனம் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

2017-12-07@ 17:20:08

மதுரை: மதுரை ஆதீனம் மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு நிரந்தர தடை விதிக்கக் கோரிய வழக்கின் இறுதி விசாரணை மற்றும் தீர்ப்பை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலப்பிரதாபன் என்பவரின் மனுவில் சட்டவிரோத ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா தன்னை மடாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டதாகவும், அதற்கு எதிரான வழக்கில் அவர் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன் மதுரை ஆதீன விவகாரத்தில் தலையிடவும், மடத்திற்குள் நுழையவும் ஏற்கனவே நித்யானந்தாவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, வழக்கு குறித்து பதிலளிக்க நித்யானந்தா தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதுவரை ஆதினம் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்