SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓகி புயலில் சிக்கி ரத்னகிரியில் தஞ்சமடைந்த கேரள மீனவர்களுக்கு அம்மாநில அதிகாரிகள் உதவி

2017-12-07@ 17:05:02

ரத்னகிரி: ஓகி புயலில் பாதிக்கப்பட்டு மராட்டிய மாநிலம் ரத்னகிரியில் தஞ்சம் அடைந்த கேரள மீனவர்களை மீட்க அங்கு அம்மாநில அதிகாரிகள் சென்றுள்ளனர். மூன்றாவது முறையாக மீனவர்களை சந்திக்க அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். கேரளத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மீனவருக்கும் அம்மாநில அதிகாரிகள் ரூ. 420 உதவி தொகை அளித்துள்ளனர். படகு ஒன்றுக்கு 600 லிட்டர் வீதம் டீசல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

மேலும் ஒரு வேளை தமிழக மீனவர்கள் வந்த படகுகளில் கேரள மீனவர் யாராவது இருந்தாலும் இந்த நிதி உதவியும், 600 லிட்டர் வீதம் டீசலும் வழங்கப்படும் என்று கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

கேரள மீனவர்கள் குற்றச்சாட்டு:
 ரத்னகிரியில் இருந்து கொச்சின் துறைமுகத்துக்கு செல்ல எங்களுக்கு குறைந்தது 1000 லிட்டர் டீசல் வேண்டும் , ஆனால் எங்கள் அரசு தரும் 600 லிட்டர் டீசல் போதாது என புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக மீனவர்களின் நிலை:
இன்று 7-வது நாளாக ஓகி புயலில் சிக்கி கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள் 30-க்கும் மேற்பட்ட படகுகளில் 500 தமிழக மீனவர்கள் ரத்னகிரியில் தஞ்சம் அடைந்துள்ளனர். தமிழக மீனவர்களான எங்களை இதுவரை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2017

    12-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 10thexams_111

    10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

  • hardik_anivaguppu

    பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

  • rahulgandhi_11

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

  • kumari_ogi_puyal11

    ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்