SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.கே.நகர். இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: களத்தில் 59 பேர் போட்டி

2017-12-07@ 16:02:04

சென்னை: ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 59 பேர் போட்டியிடுகின்றனர். இந்த இடைத்தேர்தலில் ஜெ.தீபா , விஷாலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் 72 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 73 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 சுயேச்சை வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 59 பேர் போட்டியிடுகின்றனர்.

களத்தில் உள்ள வேட்பாளர்கள்:

அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

சுயேச்சைகள் வாக்குவாதம்:
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அனுமதிக்கக் கோரி சுயேச்சை வேட்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உள்ளே செல்ல போலீஸ் அனுமதி மறுப்பதால் சுயேச்சை வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரம் மூலமே இடைத்தேர்தல்:
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலமே இடைத்தேர்தல் நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் vvpat இயந்திரமும் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறியுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_well_fare

    மோடியின் மிசோரம், மேகாலயா பயணம்: பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு

  • delhiamarsolidiers

    இந்தியா-பாகிஸ்தான் போரின் 46வது வெற்றி தினத்தையொட்டி அமர் ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை

  • RahulGandhitakecharge

    காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி: தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

  • panipolivu_11

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு :வாட்டி வதைக்கும் குளிரை தணிக்க தீமூட்டி குளிர்காயும் மக்கள்

  • INdonesia_EarthquAke

    இந்தோனேஷியாவின் ஜாவா திவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம், 2 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்