SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொகுசு கார் வாங்கியதில் வரி மோசடி வழக்கு: சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரண்ட்

2017-12-07@ 15:29:39

சென்னை : சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் எம்.நடராஜனுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தை நடராஜன் நாடியிருந்தார். நடராஜனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சரணடைய உச்சநீதிமன்றம் விலக்கு அளித்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைக்காததால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து லெக்சஸ் சொகுசு கார் ஒன்றை 1994ம் ஆண்டு இறக்குமதி செய்தார். அப்படி இறக்குமதி செய்யும் போது  இந்த சொகுசு காரை 1993ம் தயாரிக்கப்பட்ட கார் என்று கூறி, அதற்கு ஏற்றவாறு ஆவணங்களை திருத்தி தாக்கல் செய்து ரூ. 1கொடியே 62 லட்சம் ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலாவின் கணவர் நடராஜன், அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், இந்தியன் வங்கி மேலாளர் சுஜரிதா ஆகியோர் 5 பேர் மீது சிபிஐ வழக்கு செய்தது.  லண்டனை சேர்ந்த தொழிலதிபர் பாலகிருஷ்ணன் தலைமறைவானதால், மீதமுள்ள 4 பேரிடம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

நீண்ட விசாரணைக்கு பிறகு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2010ல் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  4 பேருக்கும் சிறை தண்டனையை உறுதி செய்து, அவர்கள் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் இந்த 4 பேரை சிறையில் அடைக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்று கொண்ட நீதிபதி திரு நீலபிரசாத் இவர்கள்   4 பேருக்கும் எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்