SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வட திசையில் நகர்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

2017-12-07@ 14:48:58

சென்னை: வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் நிலைக்கொணடிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதிசையில் நகர்ந்து மசூலிப்பட்டினத்திற்கு 875 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இது மேலும் வடக்கில் ஆந்திரா - ஒடிசா கடற்பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் நேற்று தென்கிழக்கு வங்க பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடதிசையில் நகர்ந்துள்ளதாகவும், மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 9 வரையிலான காலக்கட்டத்தில் வடக்கு ஆந்திரா - ஒடிசா கடற்பகுதியை நோக்கி நகரும் என்றார். கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் வடதமிழக மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்தார். அதே போல நாளை மற்றும் நாளை மறுநாள் ஒடிசா மற்றும் ஆந்திர கடற்பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்