SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதி நளினிக்கு பரோல் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு : உயர்நீதிமன்றத்தில் நளினி பதில் மனு தாக்கல்

2017-12-07@ 14:46:13

சென்னை : பரோல் வாங்கினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவேன் என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டு தவறானது என  ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக நளினி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தமது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அவர் வெளிநாடு தப்பிச் சென்று விடக்கூடும் என்று கூறி பரோல் வழங்க முடியாது என தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தற்போது நளினி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் கடந்த 2014ம் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்ததை சுட்டி  காட்டியுள்ளார். ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தததால் தான் விடுதலை பெற முடியவில்லை என நளினி குறிப்பிட்டுள்ளார். தம்மை விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக அரசு தற்போது பரோல் வழங்க மறுப்பதை ஏற்று கொள்ள முடியாது என்றும் மனுவில் நளினி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் பேரறிவாளானுக்கு  பரோல் வழங்கியதை போல தமக்கும் 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என நளினி கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்