SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெ., மரணம்: அரசு மருத்துவர் பாலாஜியிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை: மீண்டும் ஆஜராக உத்தரவு

2017-12-07@ 14:26:50

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு மருத்துவர் பாலாஜியிடம் 3 மணி நேரமாக நடந்த விசாரணை முடிந்தது. இன்று காலை ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜரானார். ஜெயலலிதா கைரேகை தொடர்பாக டாக்டர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் விளக்கமளிக்க விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜரானார்.  

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸை அங்கீகரித்து தேர்தல் ஆவணத்தில் இடம்பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை பெற்றது தொடர்பாக அரசு மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது திருப்பரங்குன்றம் தொகுதிக்கு, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸ் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸையும், அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரியும் , தனது இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவணப் படிவத்தில் ஜெயலலிதா பதிவு செய்து கொடுத்திருந்தார்.

அதை சென்னை அரசு பொது மருத்துவமனையின் மருத்துவரான பாலாஜி சான்றொப்பம் அளித்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. அரசு மருத்துவர் பாலாஜியிடம் 3 மணி நேரமாக நடந்த விசாரணை முடிந்த நிலையில் மீண்டும் விசாரணை ஆணையத்தில் வரும் 27-ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_well_fare

    மோடியின் மிசோரம், மேகாலயா பயணம்: பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு

  • delhiamarsolidiers

    இந்தியா-பாகிஸ்தான் போரின் 46வது வெற்றி தினத்தையொட்டி அமர் ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை

  • RahulGandhitakecharge

    காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி: தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

  • panipolivu_11

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு :வாட்டி வதைக்கும் குளிரை தணிக்க தீமூட்டி குளிர்காயும் மக்கள்

  • INdonesia_EarthquAke

    இந்தோனேஷியாவின் ஜாவா திவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம், 2 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்