SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்ய 4 நாட்களாக அனுமதி மறுப்பு - தினகரன் தரப்பு ஆவணங்கள் வெளியீடு

2017-12-07@ 13:54:26

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய தினகரனுக்கு 4 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவல்துறை அனுமதி மறுப்பதால் தேர்தல் பிரச்சாரத்தை தினகரன் அணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தினகரன் தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்வதற்காக 4 நாட்களாக காவல்துறையிடம் அனுமதி கேட்டு வந்தார்.ஆனால் அனுமதி மறுக்கப்ப்டடது. இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதன் பிறகு மாலை 4 மணிக்கு மேல் ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 139வது வட்டத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளை அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். 4 நாட்களாக தங்களால் பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்றும் இன்று தேர்தல் பிரச்சாரம் நடத்த தங்களுக்கு அனுமதி வேண்டும் என்றும் தெரிவித்தனர். எனினும் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன், தற்போது அவருடைய தரப்பு சார்பாக எம்எல்ஏ வெற்றிவேல் அவர்கள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி , ராஜேஷ் லக்கானியிடம் தற்போது ஒரு மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், தொடர்ந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்ய 4 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டது குறித்து தினகரன் தரப்பு  ஆவணங்கள் வெளியிட்டுள்ளது. 

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்