SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷாலின் வேட்புமனு மறுபரிசீலனை?

2017-12-07@ 13:47:58

சென்னை: விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள்  2 பேரும் இன்று மாலை 3 மணிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தால் வேட்புமனு மறு பரிசீலனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் கையில்தான் முடிவு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

முன்னதாக விஷாலை முன் மொழிந்த 10 பேரில் 2 பேரின் தகவல்கள் சரியாக இல்லாத காரணத்தால் வேட்புமனுவை நிராகரிப்பதாக முதலில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். அதன் பின்னர் வேட்பு மனுவை மாலை தேர்தல் ஆணையம் ஏற்றது. இரண்டாவது முறை  பரிசீலனைக்குப் பிறகு விஷால் மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு வேட்புமனு மீண்டும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_well_fare

    மோடியின் மிசோரம், மேகாலயா பயணம்: பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு

  • delhiamarsolidiers

    இந்தியா-பாகிஸ்தான் போரின் 46வது வெற்றி தினத்தையொட்டி அமர் ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை

  • RahulGandhitakecharge

    காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி: தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

  • panipolivu_11

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு :வாட்டி வதைக்கும் குளிரை தணிக்க தீமூட்டி குளிர்காயும் மக்கள்

  • INdonesia_EarthquAke

    இந்தோனேஷியாவின் ஜாவா திவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம், 2 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்