SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூமியைப் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு: ஏலியன்கள் இருக்க வாய்ப்பு என அறிவியலாளர்கள் கணிப்பு

2017-12-07@ 12:12:13

நியூயார்க்: தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூமியைப் போன்ற புதிய கிரகத்தில் ஏலியன்கள் இருக்கக் கூடும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். பூமியில் இருந்து 111 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள K2-18b என்ற சூரிய மண்டலத்தில் பூமியைப் போன்ற மற்றொரு கிரகம் உள்ளதாக கனடாவில் உள்ள ரொறன்ரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அது மட்டுமின்றி K2-18b கிரகத்திற்கு அண்டை கோலாக K2-18c என்ற கிரகமும் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. K2-18b கிரகம் பாறைகளால் ஆனதாக இருப்பதால் இதன் மேற்பரப்பில் உயிர் வாழ்வதற்கு தேவையான தண்ணீர் இருக்கக் கூடும் என்றும், ஏலியன்கள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகம் மிகவும் துல்லியமான தொலைநோக்கியின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்