SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலூரில் தங்க கடத்தலில் நடந்த விபரீதம்: இருவரை கொல்ல முயற்சி

2017-12-07@ 12:08:20

கடலூர்: கடத்தல் தங்கத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காததால் இரண்டு இளைஞர்களை கடத்தி சென்று கொலை செய்ய முயன்ற போது இருவரும் உயிர் தப்பியுள்ளனர். கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்தது, அப்போது அந்த வழியே சென்ற காரில் இருந்து வெளியே குதித்த இரண்டு பேர் தமுமுக கூட்டத்துக்கு நடுவே சென்று தங்களை காப்பாற்றுமாறு உதவி கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கூட்டத்தினர் இருவரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது வெளிவந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இலங்கையில் இருந்து வந்த 12 கிலோ கடத்தல் தங்கத்தை நடுக்கடலில் வைத்து பூம்புகாரை சேர்ந்த பாக்யராஜ் மற்றும் அவரின் உறவினர் ஜெகனிடம் சிலர் ஒப்படைத்தனர். எண்ணூரை சேர்ந்த மதி என்பவரிடம் தருமாறு அளிக்கப்பட இந்த தங்க பிஸ்கெட்களில் 8 கிலோவை எடுத்துக்கொண்டு 4 கிலோவை மற்றும் தந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மதி தலைமறைவாக இருந்த பாக்யராஜை தேடி அழைத்துள்ளார். அவர் கிடைக்காததால் அவரின் உறவினர்களான ஜெகன் மற்றும் செண்பகராஜ் இருவரையும் மதி காரில் கடத்தினர்.   

தங்கத்துடன் தலைமறைவான பாக்யராஜின் உறவினர்களான ஜெகன் மற்றும் செண்பகராஜை கொலை செய்வதற்கு காரில் கடத்தி சென்ற போதுதான் அவர்கள் இருவரும் காரில் இருந்து தப்பி தமுமுக போராட்டத்துக்குள் புகுந்தனர். இந்த சம்பவம் பற்றி விசாரித்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் ஓட்டுநர் ராஜாவை கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவான மதி மற்றும் தங்க கடத்ததில் ஈடுப்பட்ட பாக்யராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

  • syria_arasupadaigal

    சிரியாவில் போர் : அரசு படைகள் உக்கிர தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 100 பேர் பலி

  • indo_pugai11

    அதிபயங்கரமாக வெடித்துச் சிதறிய சினாபங் எரிமலை: வானுயர எழுந்தது நெருப்புப் புகை

  • ElephantRecreation

    மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் நிறைவு

  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X