SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வு

2017-12-07@ 10:55:55

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 205 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 149.05 புள்ளிகள் உயர்ந்து 32,746.23 புள்ளிகளாக உள்ளது. மூலதன பொருட்கள், மின்சாரம், எண்ணெய் & எரிவாயு மற்றும் பொதுத்துறை நிறுவனம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.20% வரை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 49.25 புள்ளிகள் அதிகரித்து 10,093.35 புள்ளிகளாக உள்ளது.

டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, ஹீரோ மோட்டோ கார்ப், அதானி துறைமுகம், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, இந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல், என்டிபிசி, பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, எஸ்.பி.ஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற நிறுவன பங்குகள் விலை 1.32% வரை உயர்ந்து காணப்பட்டது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.52% சரிந்துள்ளபோது, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.10% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 1.27% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.16% வரை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

  • ebolaaa_viruss1

    காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்