SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பந்துவீச்சில் ஸ்டார்க், ஹேசல்வுட் அசத்தல் 120 ரன் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி

2017-12-07@ 01:19:07

அடிலெய்டு : இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், 120 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றது.
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசிய நிலையில். ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 442 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 227 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து, 215 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா எதிர்பாராத வகையில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 354 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 4ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்திருந்தது.

கேப்டன் ஜோ ரூட் 67 ரன், வோக்ஸ் 5 ரன்னுடன் நேற்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். இருவருமே மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஹேசல்வுட் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். மொயீன் அலி 2 ரன் எடுத்து நாதன் லயன் சுழலில் பலியானார். ஓரளவு தாக்குப்பிடித்த பேர்ஸ்டோ 36 ரன், ஓவர்ட்டன் 7, ஸ்டூவர்ட் பிராடு 8 ரன் எடுத்து மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (84.2 ஓவர்), நேற்று அந்த அணி 57 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க் 5, ஹேசல்வுட், லயன் தலா 2, கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். ஷான் மார்ஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 120 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்க, 3வது டெஸ்ட் பெர்த் வாகா மைதானத்தில் வரும் 14ம் தேதி தொடங்குகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்