SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துளித்துளியாய்

2017-12-07@ 01:18:43

* உலக ஹாக்கி லீக் பைனல் தொடரின் கால் இறுதியில் ஸ்பெயின் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு முன்னேறியது.
 2018ம் ஆண்டு டென்னிஸ் சீசனின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (36 வயது) களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெல்போர்னில் இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அவர், செப்டம்பரில் குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஐபிஎல் டி20 தொடரின் 2018 சீசனில் மீண்டும் களமிறங்க  உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.டோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகக் குழு நேற்று வெளியிட்ட புதிய விதிமுறைகளின் படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். வீரர்களை ஏலம் எடுப்பதற்கான தொகை ஒவ்வொரு அணிக்கும் ரூ.66 கோடியில் இருந்து ரூ.80 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுமுக வீரர்களுக்கான அதிகபட்ச ஏலத் தொகை ரூ.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* இந்தியாவில் இருந்து 100 உசேன் போல்ட்களை உருவாக்க முடியும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* டெல்லி டெஸ்ட் போட்டியின்போது காற்று மாசு காரணமாக தங்கள் அணி வீரர்கள் பெரிதும் அவதிப்பட்டதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் புகார் செய்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-08-2018

    22-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்