SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசியலில் இருந்து ராணுவம் விலகி இருக்க வேண்டும் : பிபின் ராவத்

2017-12-07@ 01:09:16

புதுடெல்லி : அரசியலில் இருந்து ராணுவம் விலகி இருக்க வேண்டும் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். ஐக்கிய சேவை அமைப்பு சார்பில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டு பேசியதாவது: ராணுவம் எப்போதும் அரசியலில் இருந்து விலகியே இருக்க வேண்டும். ஏனெனில், ராணுவத்தில் அரசியல் கலப்பதை சமீபகாலமாக நாம் உணர்ந்துள்ளோம். ஒரு மதச்சார்பற்ற சூழ்நிலையில் நாம் இயங்கி வருகிறோம். மிகவும் துடிப்பான ஜனநாயகம் இங்கு உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ராணுவத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது. கடந்த காலங்களில் பெண்கள் பற்றியும், அரசியல் பற்றியும் ஒருபோதும் படைப்பிரிவினர் சிந்தித்தது கிடையாது.

சமீப காலமாக இவை அனைத்தும் படிப்படியாக ராணுவத்திலும் நுழைக்கப்படுகின்றன. எந்த ஒரு பிரச்னை என்றாலும் ராணுவ அமைப்பையோ அல்லது தனிப்பட்ட வீரரையோ வைத்து அரசியல் செய்யும் சூழல் வந்தால் அதை தவிர்ப்பது நல்லது. நமது அரசியல் நடவடிக்கையில் பாதுகாப்பு படைகள் ஒருபோதும் தலையிட்டது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்